மயிலாடுதுறையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம். 200 நபர்களுக்கு பணி ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.;

Update: 2022-04-09 14:18 GMT

செம்பனார்கோவில் தனியார் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் துவக்க நிகழ்ச்சி 

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் தனியார் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய இம்முகாமில் சென்னை, ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்சி, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னனி 51 நிறுவனங்கள் கலந்துகொண்டு பணியாளர்கள் தேர்வு செய்தனர்.

இம்முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் பட்டமேற்படிப்பு வரை படித்த 1600 பேர் வேலைநாடுநர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா பங்கேற்று 200 நபர்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கினார்.

Tags:    

Similar News