நகை கடன் தள்ளுபடி: 10 பேருக்கு ஆணை வழங்கிய பூம்புகார் எம்எல்ஏ நிவேதாமுருகன்
முதற்கட்டமாக 10 நபர்களுக்கு அடகு வைத்திருந்த நகை மற்றும் தள்ளுபடி ஆணைகளை வழங்கி பேசினார்.
மயிலாடுதுறை அடுத்து கீழையூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற நிகழ்வில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் பங்கேற்று 10 நபர்களுக்கு நகை மற்றும் தள்ளுபடி ஆணை அளிக்கு தொடக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த பொது நகைக்கடன் தள்ளுபடி மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா கீழையூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு முதற்கட்டமாக 10 நபர்களுக்கு அடகு வைத்திருந்த நகை மற்றும் தள்ளுபடி ஆணைகளை வழங்கி பேசினார். இதில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.அன்பழகன், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன், செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், வங்கியின் அலுவலர்கள் மற்றும் திமுக பொறுப்பாளர்கள் பலர் உடன் இருந்தனர்.