சீர்காழி அருகே வங்கி நகை மதிப்பீட்டாளர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்

சீர்காழி அருகே மோசடியில் ஈடுபட்ட வங்கி நகை மதிப்பீட்டாளர் வீட்டை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2021-12-22 12:39 GMT

சீர்காழி அருகே வங்கி நகை மதிப்பீட்டாளர் வீட்டை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் கிராமத்தில் இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சீர்காழி மதினா நகரை சேர்ந்த கலைச்செல்வன் என்பவர் நகை மதிப்பீட்டாளர் ஆக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வங்கி வாடிக்கையாளர்களிடம் பேசி நகைகளை அடகு வைக்க உதவி கேட்டுள்ளார். அதன்பேரில் அவர்கள் அடகுவைத்து கொடுத்துள்ளனர். ஆனால் அந்த நகைகள் அனைத்தும் போலி என்பது ஆய்வின் போது தெரிய வந்தது. இதனை அடுத்து நகை மதிப்பீட்டாளர் கலைச்செல்வனுக்கு அடகுவைக்க உதவியதாக கூறி இருபத்தி எட்டு பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது. இதில் சிலர் ஓய்வு ஊதியம் பெறும் நிலையில் உள்ள முதியவர்களும் உள்ளனர். தங்களுக்கும் இந்த முறை கேட்டும் எந்த தொடர்பும் இல்லை என 28 பேரும் உறுதி அளித்துள்ள நிலையில் முறைகேட்டில் ஈடுபட்ட கலைச்செல்வன் வாடிக்கையாளர்களுக்கு முறைகேட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்து தனது வீட்டை வங்கியின் பெயரில் பிணையாக கொடுத்துள்ளார்.

ஆனால் இதுவரை வங்கி அந்த வீட்டை எதுவும் செய்யாமலும் கலைச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்காமலும் காலம் தாழ்த்திவிட்டு 28 பேரின் வங்கிக் கணக்குகளையும் முடக்கியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் இருபத்தி எட்டு பேரும் நகை மதிப்பீட்டாளர் கலைச்செல்வனின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.போலி நகைகளை அடகு வைத்த கலைச்செல்வன் மீது நடவடிக்கை எடுத்து தங்கள் வங்கி கணக்குகளை பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News