மயிலாடுதுறையில் அண்ணா திராவிடர் கழகத்தினர் ஜெயலலிதா படத்திற்கு அஞ்சலி
ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மயிலாடுதுறையில் அண்ணா திராவிடர் கழகத்தினர் ஜெயலலிதா படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
மயிலாடுதுறையில் அண்ணா திராவிடர் கழகம் மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் சுதாகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில இளைஞர்அணி செயலாளர் ஜெய்ஆனந்த் கலந்து கொண்டார். அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பி.எட். படிக்கும் திருநங்கை ஒருவருக்கு ரூபாய் 20 ஆயிரம் கல்விஉதவித்தொகையை ஜெய்ஆனந்த் வழங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய் ஆனந்த் கூறுகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் மோசமான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. அதிலிருந்து மீண்டு வருவதற்கு கொஞ்சம் நாட்கள் ஆகும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொந்தங்கள் ஆகிய நாங்கள் விரைவில் எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து நம் நாட்டை நல்வழிபடுத்தி நல்ல திசையில் கொண்டு செல்வதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுப்போம் என்றார்.