மயிலாடுதுறையில் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
மயிலாடுதுறையில் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுவினர் மௌன ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர்;
மயிலாடுதுறை அடுத்த மாப்படுகை அண்ணா சாலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக தெற்கு ஒன்றியம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட அவரது உருவபடத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார் தலைமையில் சோழம்பேட்டை, அண்ணா சாலையில் இருந்து மாப்படுகை வரை மவுன ஊர்வலமாக சென்றனர். ஏராளமானோர் கருப்பு சட்டை அணிந்து மௌன ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
பின்னர் மாப்படுகையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.