மயிலாடுதுறை மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் இன்று ஜமாபந்தி துவக்கம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கலெக்டர் லலிதா தலைமையில் இன்று ஜமாபந்தி துவக்கி வைக்கப்பட்டது.;
மயிலாடுதுறை மாவட்டத்தில் 1431-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் கணக்கு முடிப்பு நிகழ்ச்சி எனப்படும் ஜமாபந்தி இன்று தொடங்கியது. மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லலிதா பங்கேற்றார்.
இன்றைய ஜமாபந்தியில் மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு வருவாய் சரகத்திற்கு உட்பட்ட திருச்சிற்றம்பலம், கடலங்குடி, முடிகண்டநல்லூர், மணல்மேடு, கிழாய், கேசிங்கன், ஆத்தூர் பூதங்குடி மற்றும் நமச்சிவாயபுரம் ஆகிய 9 வருவாய் கிராமங்களின் கணக்குகள் சரி பார்க்கப்பட்டன.
இதில் சம்பந்தப்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். வருகின்ற 25 ஆம் தேதி வரை நிகழ்ச்சி நடைபெறுகிறது. கூட்டத்தில் வட்டாட்சியர் மகேந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் குத்தாலம் சீர்காழி தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் ஜமாபந்தி தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.