மயிலாடுதுறை அருகே ரேஷன் அரிசி குட்டையில் வீச்சு சம்பவம் பற்றி விசாரணை

மயிலாடுதுறை அருகே ரேஷன் அரிசி குட்டையில் வீசப்பட்ட சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-01-09 04:00 GMT

ரேஷன் அரிசி குளத்தில் கொட்டப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

மயிலாடுதுறை அருகே உள்ள சோழம்பேட்டை கிராமம் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள இரண்டு குட்டைகளில் ரேஷன் அரிசி கொட்டப்பட்டும் 30க்கும் மேற்பட்ட மூட்டைகள் வீசப்பட்டிருந்து குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்

இது குறித்து மயிலாடுதுறை டி.எஸ்.பி. வசந்த்ராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் செல்வம் உட்பட போலீசார் சம்பவ இடம் சென்று அரிசி மூட்டைகளை ஆய்வு செய்தனர்.

மயிலாடுதுறை வட்ட வழங்கல் துறையினர், குட்டையில் கிடந்த அரிசி மூடைகளையும் சிதறிக்கிடந்த அரிசியையும் சேகரித்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இதுகுறித்து புகாரை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையை தெரிவித்துள்ளனர். ரேஷன் கடைகளிலில் இருந்து வந்த அரிசியா அல்லது சித்தர்காட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கிலிருந்து வெளியில் கொட்டப்பட்ட அரிசியா என கண்டுபிடிக்கும் பணி துவங்கியுள்ளது.

மேலும் சோழம்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

Similar News