மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கம் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு வருடத்திற்கு இரண்டு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று உறுதியளித்து வாக்கு சேகரிப்பு;
மயிலாடுதுறை நகராட்சி பத்தாவது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ராஜ்குமார் வாக்கு சேகரிப்பின் போது
மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பதற்கு கடைசி நாளான இன்று அனைத்து வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் மயிலாடுதுறை நகராட்சி பத்தாவது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ராஜ்குமார் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கத்தினரோடு வீடுவீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
10 வது வார்டில் சிசிடிவி கேமரா அமைக்கப்படும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிக்கும் மக்களுக்கு 2 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், 10-ஆவது வார்டு மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும், உயிரிழந்தவர்களுக்கு ஈமக்கிரியை சடங்கு இலவசமாக செய்து தரப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்து விஜய் மக்கள் இயக்கத்தினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இளைய தலைமுறையினருக்கு வாக்களிக்க வேண்டும் என்று பொதுமக்களை கேட்டுக் கொண்டனர்.