இந்து மதத்தை இழிவுபடுத்தி பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
இந்து மதத்தை இழிவுபடுத்தி பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறைபோலீசில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்து மதத்தை இழிவுபடுத்தி யூடியூப் சேனலில் பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பா.ஜ.க.வினர் புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து, அக்கட்சியின் நகர தலைவர் மோடி.கண்ணன் என்பவர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், யு2 புரூட்டஸ் என்ற யுடியூப் சேனலில் மைனர் என்ற பெயரில் உள்ள நபர் சிதம்பரம் நடராஜர் மற்றும் அக்கோயிலில் உள்ள காளி தெய்வ விக்கிரகத்தை கொச்சைப்படுத்தி பதிவிட்டு பகிர்ந்துள்ளார். இது இந்து மக்களின் உணர்வுளை காயப்படுத்துவதாக அமைந்துள்ளது. இது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 295(ஏ), 153ஏ(2), 154(1), 505(2) ஆகிய பிரிவுகளின்படி தண்டனைக்குரிய குற்றச்செயல் ஆகும். எனவே, அந்த யூடியூப் சேனலை முடக்குவதுடன், அதன் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இந்து மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் பதிவிட்ட நபரின்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்புகாரில் தெரிவித்துள்ளார். அப்போது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மயில்ரவி, மாவட்ட இளைஞரணி செயலாளர் பாரதிகண்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.