மயிலாடுதுறையில் வருமான வரி - ஜிஎஸ்டி குறித்த பயிற்சி வகுப்பு

மயிலாடுதுறையில் நடந்த வருமானவரிஸ ஜிஎஸ்டி வரி பயிற்சி வகுப்பில் தமிழகம் முழுவதுமிருந்து 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு;

Update: 2022-03-26 09:30 GMT

மயிலாடுதுறையில் நடைபெற்ற வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி வரி குறித்த பயிற்சி வகுப்பில் மாநிலம் முழுவதிலும் இருந்து 100க்கும் மேற்பட்ட வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி வரி பயிற்சியாளர்கள் மற்றும் கணக்காளர்கள் பங்கேற்றனர்.

வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி வரி பயிற்சியாளர்கள் சங்கம் தமிழகம் சார்பில் மயிலாடுதுறையில் வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி வரி குறித்து வரி பயிற்சிற்சியாளர்கள், கணக்காளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. சங்கத் தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பட்டயக் கணக்காளர்கள் சுப்பிரமணியன், கோபாலகிருஷ்ணராஜூ ஆகியோர் பங்கேற்று, வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி வரியில் புதிதாக செய்யப்பட்ட மாற்றங்கள், பட்ஜெட் அறிவிப்புகள், ஜிஎஸ்டி தாக்கல் செய்யும் முறை, தவறாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை திருத்தம் செய்யும் முறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பயிற்சி அளித்தனர். இதில், தமிழகம் முழுவதும் இருந்து 100க்கும் மேற்பட்ட வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி வரி பயிற்சியாளர்கள், கணக்காளர்கள் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட வணிகர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


Tags:    

Similar News