மயிலாடுதுறையில் அமைச்சர் மெய்யநாதன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
மயிலாடுதுறையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.;
மயிலாடுதுறையில் அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வருவாய் துறை சார்பாக நடைபெற்ற மக்கள் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை திருமண உதவி திட்டம் மற்றும் புதிய ரேஷன் அட்டை உள்ளிட்ட நலத்திட்டங்களை 324 பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா எம்.முருகன்,எம்.பன்னீர்செல்வம்,ராஜகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்