மயிலாடுதுறையில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்றதை முன்னிட்டு மயிலாடுதுறையில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.;

Update: 2021-05-07 13:30 GMT

சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்று முதலமைச்சராக பதவி ஏற்றார். இதனை தமிழகம் முழுவதும் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறையில் நகர திமுக சார்பில் திமுகவினர் மயிலாடுதுறை பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Tags:    

Similar News