மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 8-ம்வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 1 முதல் 8-ம்வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.;
கலெக்டர் லலிதா.
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியதால் தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருவததால் அம்மாவட்டத்தில் இன்று ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டு உள்ளார்.