தீவிபத்தில் வீடு எரிந்து சேதம்: பூம்புகார் எம்எல்ஏ நேரில் நிவாரணம் வழங்கல்

தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 ஆயிரம் மற்றும் அரிசி, மளிகை பொருட்கள், பாய், போர்வை உள்ளிட்டபொருள்களை வழங்கினார்

Update: 2021-12-25 12:00 GMT

பரசலூர் ஊராட்சியில் கூரை வீடு திடீர் தீவிபத்தில் எரிந்து சேதம் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி ரூ 5,000 நிவாரணம் வழங்கினார்.

பரசலூர் ஊராட்சியில் கூரை வீடு திடீர் தீவிபத்தில் எரிந்து சேதம் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் நேரில் சென்று  ஆறுதல் கூறி ரூ 5,000 நிவாரணம் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம், பரசலூர் ஊராட்சி சாத்தனூர் மேலத்தெருவை சார்ந்த வணமயில் (80) என்பவரது வீடு வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீப்பிடித்து சேதம் அடைந்தது. தகவலறிந்த பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் நேரில் சென்று ஆறுதல் கூறி தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 ஆயிரம் மற்றும் அரிசி, மளிகை பொருட்கள், பாய், போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் நிவாரணமாக வழங்கினார்.

அதேபோல,  தரங்கம்பாடி வட்டாட்சியர் ஹரிதரன் அரசு சார்பில் ரூ.5 ஆயிரம் மற்றும் வேட்டி, புடவை, மண்ணெண்ணெய், அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.இதில், நாகை வடக்கு மாவட்ட செயலாளர் ஞானவேலன், செம்பனார்கோயில் வடக்கு ஒன்றிய செயலாளர் பிஎம்.அன்பழகன், செம்பனார் கோவில் வட்டார வருவாய் அலுவலர் ரகு, கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கர் மற்றும் அரசு அதிகாரிகள், திமுக பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News