தங்கம் உருக்கும் அரசு முடிவுக்கு எதிர்ப்பு: இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

கோவில் தங்க நகைகளை உருக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, மயிலாடுதுறையில் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-10-26 09:30 GMT

கோவில் தங்க நகைகளை உருக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து,  மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, இந்து முன்னணி அமைப்பினர்.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு, இந்து முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்ட பொதுச் செயலாளர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சரண்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், கோவிலில் பக்தர்கள் இறைவனுக்கு நேர்த்திக்கடனாக செலுத்திய தங்க நகைகளை உருக்கும் தமிழக அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மன்னர்கள் காலத்தில் கட்டிய கோயில்களில்,  இந்து சமய அறநிலையத்துறை ஒருவேளை பூஜை கூட நடத்தாமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அறநிலையத்துறையின் பிடியில் இருந்து கோயில்களை மீட்டெடுக்க வலியுறுத்தியும், இறைவன் கருவறையில் இருந்து எடுத்து அரசின் கருவூலத்தை நிரப்புவதை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பங்கேற்றனர். 

Tags:    

Similar News