மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை: அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் சேதம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு விவசாயிகள் 67 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா தாளடி பயிர்கள் நடவு செய்துள்ளனர்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் 8 ஆயிரம் ஏக்கரில் பால்கட்டிய நெல்மணிகள் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா தாளடி பயிர்கள் வயலில் சாய்ந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு விவசாயிகள் 67 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா தாளடி பயிர்கள் நடவு செய்துள்ளனர். பயிர்கள் நடவு செய்தபோது பருவம்தவறி பெய்தமழை, அதன்பின்னர் பெய்த வடகிழக்கு பருவமழையால் 30 ஆயிரம் ஏக்கருக்குமேல் சம்பா தாளடி பயிர்கள் 2 முறை பாதிக்கப்பட்டது. அதன்பிறகு மழையால் பாதித்த பயிர்களுக்கு உரமிட்டு காப்பாற்றி பயிர்கள் கதிர் பிடித்து முற்றும் நிலையில் உள்ளது. முற்பட்ட சம்பா பயிர்கள்; அறுவடை செய்வதற்கு தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த 3 நாட்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.நேற்று இரவு 12மணிமுதல் காலை இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்ததால் வயல்களில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் கதிர்வந்து பால்கட்டும் நிலையில் உள்ள பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளது. கழனிவாசல், அன்னவாசல், பல்லவராயன்பேட்டை, மாப்படுகை, கொற்கை, தாழஞ்சேரி, மணல்மேடு, சேத்திராபாலபுரம், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 8 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளது. பல்வேறு இடங்களில் வயலில் சாய்ந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. கதிர்முற்றிய நெல்கள் தண்ணீரில் கிடந்தால் முளைத்து சேதமடையும். கதிர்கள் முற்றாதநிலையில் இருக்கும் பயிர்கள் பதறாக மாறிவிடும் தொடர்ந்து மழை நீடித்து வருவதால்
விவசாயிகளுக்குமகசூல்பாதிப்படையும்என்பதால்வேதனையடைந்துள்ளனர். 3வதுமுறையாக இந்தஆண்டு விவசாயிகள் பாதிப்பைசந்தித்துள்ளதால், தமிழக அரசு சம்பா தாளடி பயிர் சேதம் குறித்து முறையாக வருவாய்த்துறை, வேளாண் துறை மூலம் கணக்கெடுப்பு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகையை நிவாரணமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.