சங்கரன்பந்தலில் பொதுமக்களுக்கு சுகாதாரத் துறையினர் கொரோனா விழிப்புணர்வு

மயிலாடுதுறை மாவட்டம சங்கரன்பந்தலில் பொதுமக்களுக்கு சுகாதாரத் துறையினர் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.;

Update: 2022-01-09 04:48 GMT

சுகாதார துறையினர் பஸ் பயணிகளிடம் முககவசம் அணிவதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பொங்கல் திருநாளையொட்டி கடை வீதிகளில் கூடும் கூட்டங்களால் கொரோனா பரவல் மேலும் வேகமெடுக்கும் அபாயம் உள்ளதால் தமிழ்நாடு அரசு ஞாயிறு மற்றும் இரவு நேர ஊரடங்கு மட்டுமே அறிவித்துள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சங்கரன்பந்தலில் சுகாதாரத்துறை சார்பில் செம்பனார்கோயில் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் கார்த்திக் சந்திரகுமார் தலைமையில் 10 பேர் கொண்ட குழு முக கவசம் அணியாத பொதும்க்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் கொரோனா பெருந்தொற்று மற்றும் உருமாறிய ஓமிக்ரான் பரவலை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு குறித்து எடுத்துக்கூறி சமூக இடைவெளியுடன் பயணிக்க வேண்டும், முகக் கவசங்கள் அணியாதவர்களை பேருந்திலிருந்து இறக்கி அவர்களுக்கு முக கவசம் அணிவித்து பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தினர்.

இது போன்று இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் கடைகளுக்கு வந்து செல்லும் மக்களுக்கு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர்கள் ஜெயக்குமார், சீனிவாச பெருமாள், அருண், விஜயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் சந்தோஷ்குமார், மாரிமுத்து, சுபாஷ் உள்ளிட்ட குழுவினர் முக கவசம் அணிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News