மயிலாடுதுறை மாவட்டத்தில் 39 மையங்களில் நடைபெற்ற அரசுப்பணிக்கான குரூப் 2 தேர்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 39 மையங்களில் அரசுப்பணிக்கான குரூப் 2 தேர்வில் 11 ஆயிரத்து 561 நபர்கள் தேர்வு எழுதினர்;

Update: 2022-05-21 15:15 GMT

 மயிலாடுதுறை மற்றும் சீர்காழி ஆகிய இரண்டு வட்டங்களில் 39 மையங்களில் நடந்த குரூப்2 தேர்வு மையத்தை ஆட்சியர் லலிதா ஆய்வு செய்தார்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 39 மையங்களில் அரசுப்பணிக்கான குரூப் 2 தேர்வில் 11 ஆயிரத்து 561 நபர்கள் தேர்வு எழுதினர். 3 பறக்கும் படைகள் 40 வீடியோ கேமராக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டது

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி 2ல் உள்ள பணிகளுக்கான குரூப் 2 தேர்வு மயிலாடுதுறை மற்றும் சீர்காழி ஆகிய இரண்டு வட்டங்களில் 39 மையங்களில் தேர்வு மையங்களில் நடைபெற்றது. 11 ஆயிரத்து 561 நபர்கள் தேர்வு எழுதினர். 39 தலைமை கண்காணிப்பாளர்கள், 3 பறக்கும் படையினர், 8 சுற்றுக்குழு அலுவலர்கள், 78 ஆய்வு அலுவலர்கள் தேர்வு மையங்களில் பணியில் ஈடுபட்டனர். 40 வீடியோ கிராபர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு தரைதளத்திலும், பார்வையற்றவர்கள் தேர்வு எழுத மாற்றுநபர் தனிஅறைகள் வசதி செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் தனியார் கல்லூரியில் உள்ள தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

Similar News