மயிலாடுதுறை ஞானாம்பிகை தாயாருக்கு நெய்க்குள சர்க்கரை பாவாடை விசேஷ பூஜை
மயிலாடுதுறை ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர் சுவாமி கோயிலில் அம்பாளுக்கு நெய்க்குள சர்க்கரை பாவாடை விசேஷ பூஜை நடத்தப்பட்டது.
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஞானாம்பிகை தாயாருக்கு ஸ்ரீலலிதா சகஸ்ரநாம ஹோமம் செய்யப்பட்டு, பாலாபிஷேகம் செய்து, 1008 தாமரை மலர்களால் புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, அம்பாளின் முன்பு சர்க்கரைப்பொங்கல் பரப்பப்பட்டு அதில் நெய்யை ஊற்றி அம்பாளின் முகம் தெரியும் வகையில் நெய்க்குள சர்க்கரை பாவாடை விசேஷ பூஜை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.