செம்பனார்கோவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் காந்தி ஜெயந்தி விழா
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஊராட்சி அலுவலகத்தில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.;
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காந்தி ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் கலந்துகொண்டு ஊராட்சிமன்ற அலுவலகம் வளாகத்தில் உள்ள காந்தியடிகளின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஜி.என். ரவி, ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் பி.எம். ஸ்ரீதர் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.