மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே இலவச சிறப்பு மருத்துவ முகாம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.;

Update: 2022-04-21 07:28 GMT

குத்தாலம் அருகே இலவச மருத்துவ முகாம் நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கிளியனூர் ஊராட்சி ஒன்றிய அரசு மேல் நிலைப் பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் முஹம்மது ஹாலிது தலைமையில் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் கோபி, ஒன்றிய குழு உறுப்பினர் சுந்தரவல்லி ராஜேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். குத்தாலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அமிர்தகுமார் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் குமரகுருபரன் கலந்துகொண்டு மருத்துவ முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மேலும் முகாமின் சிறப்புகள் குறித்து பேசினார்.இதில் மருத்துவ அலுவலர்கள் மதுமதி தலைமையில் மருத்துவர்கள் செவிலியர்கள் சுகாதார பணியாளர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் ஈ.சி.ஜி, பொது மருத்துவம், மகளிர் குழந்தைகள் மருத்துவம், எலும்பு, காது, மூக்கு, தொண்டை பிரிவு, பல் பிரிவு, சித்தா, ஆயுர்வேதா, யுனானி, மற்றும் கண்,ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனர். அங்கன்வாடி பணியாளர்கள் சார்பில் காய்கறிகள் மற்றும் உணவு தானியங்கள் கீரைகள் மற்றும் விளக்கப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இம்முகாமில் ஊராட்சி மன்ற துணை தலைவர் வி.எஸ்.எம். மணிகண்டன் மற்றும் கிளியனூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் ,சுகாதாரத் துறையை சேர்ந்த அனைத்து அலுவலர்கள், பள்ளி ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். . 

Tags:    

Similar News