மயிலாடுதுறை அருகே இலவச வீட்டு மனை பட்டா: சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்
மயிலாடுதுறை அருகே இலவச வீட்டு மனை பட்டாக்களை சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் வழங்கினார்.;
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சாத்தங்குடி கேசவன்பாளையம் கிராமத்தில் குடியிருப்பு வாசிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தரங்கம்பாடி வட்டாட்சியர் ஹரிதரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான நிவேதா எம். முருகன் கலந்துகொண்டு 71 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் முத்தையன் மற்றும் கேசவன்பாளையம் பஞ்சாயத்தார்கள், கழகப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.