முன்னாள் அமைச்சர் கோ. சி. மணி நினைவு நாளையொட்டி சிலைக்கு மாலை அணிவிப்பு

முன்னாள் அமைச்சர் கோ. சி. மணி நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.;

Update: 2021-12-02 10:41 GMT

முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.

முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ. சி.மணியின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம், மேக்கிரிமங்கலம் ஊராட்சி ஆனாங்கூர்லரில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான நிவேதா எம். முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்நிகழ்வில், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஞானவேலன், மாவட்ட கழக பொருளாளர் ஜி.என்.ரவி, குத்தாலம் ஒன்றிய பெருந்தலைவர் மகேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் முருகப்பா, இளையபெருமாள், இமயநாதன், அப்துல்மாலிக், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ராம.சேயோன், கோ.சி.இளங்கோவன், முன்னாள் அமைச்சரின் குடும்பத்தார் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News