கொலை மிரட்டல் விடுத்ததாக அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு
கொலை மிரட்டல் விடுத்ததாக பூம்புகார் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்;
மயிலாடுதுறை மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருப்பவர் பவுன்ராஜ் இவர் பூம்புகார் தொகுதியில் 2முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். நடந்து முடிந்த 2021 சட்டசபை தேர்தலில் பூம்புகார் தொகுதியில் அ.தி.மு.க.சார்பில் பவுன்ராஜ்போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.. தேர்தலின்போது பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட எடக்குடி கிராமத்தில் வாக்களர்களுக்கு பணம்கொடுப்பது தொடர்பாக ஊராட்சி தலைவர் தங்கமணிக்கும், பவுன்ராஜூக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது பவுன்ராஜ் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மறுத்ததால் கொலை மிரட்டல் விடுத்ததாக தங்கமணி பெரம்பூர் காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி புகார் அளித்தார்.. எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தேர்தல் முடிந்தபிறகு ஏப்ரல் 23ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்கமணி மனுதாக்கல் செய்தார். கீழமைநீதிமன்றத்தை அனுகி தீர்வுபெற்றுக்கொள்ளும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனையடுத்து தரங்கம்பாடியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் தங்கமணி மனுதாக்கல் செய்தார். அதனை விசாரித்த மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் அப்துல்கனி, தங்கமணி தொடர்ந்த வழக்கில் பவுன்ராஜ் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவு 506(2)ன் கீழ் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.. அதனையடுத்து பெரம்பூர் போலீசார் இன்று முன்னாள் எம்.எல்.ஏ.பவுன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.