மயிலாடுதுறை அருகே 30-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்தது

மயிலாடுதுறை அருகே 30-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.;

Update: 2021-11-10 12:04 GMT

மயிலாடுதுறை அருகே அடியாமங்கலம் கிராமத்தில் மழை நீர்  வீடுகளை சூழ்ந்தது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆறுகள் வாய்க்கால்களில் மழைநீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்தநிலையில் மயிலாடுதுறை அருகே அடியாமங்கலம் பகுதியில் 25க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக சூழ்ந்துள்ள நிலையில் மழை நீர் வடிய வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் தூர்நாற்றம் வீசுகிறது.

அப்பகுதியில் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக மழைநீர் வடிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அடியாமங்கலம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஆறுபாதி கிராமம் ஈஸ்வரன்கோவில் பகுதியிலும் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் வருவாய்த்துறையினர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் தண்ணீரை வடிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் வடிகால் தூர்வாராததாலும், ஆக்கிரமிப்பாலும் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். எனவே உடனடியாக மழை நீரை வடிய வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என  கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News