மயிலாடுதுறை அருகே விவசாயிகள் 5 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டம்

மயிலாடுதுறை அருகே விவசாயிகள் 5 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-02-20 15:04 GMT

மயிலாடுதுறை அருகே விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கடலங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட திருவேள்விக்குடி கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வந்தது. இந்நிலையில் திருவேள்விக்குடி கிராமத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் கிராம விளையாட்டு மைதானத்தில் இந்த ஆண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டது.

இதற்காக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்திய நிலையில் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும் கடந்த வாரம் திடீரென்று புதிய இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படத் துவங்கியது. பழைய இடத்தில் நூற்றுக்கணக்கான மூட்டைகளுடன் காத்திருந்த விவசாயிகள் இதனால் ஏமாற்றம் அடைந்தனர்.

அதிக தொலைவு உள்ளதால் தங்களுக்கு மூட்டைகளை எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்படும் என்றும் கூடுதல் செலவு பிடிக்கும் என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தனிநபர்கள் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள விவசாயிகள் கடந்த 16ஆம் தேதி முதல் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

5வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் இதுவரை அதிகாரிகள் தங்களை கண்டுகொள்ளாததால் மயிலாடுதுறை சித்தர் காட்டில் உள்ள நவீன அரிசி ஆலை முன்பு நாளை விவசாயிகள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரோடு இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News