மயிலாடுதுறை அருகே பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

மயிலாடுதுறை அருகே மின்சார வாரியத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2022-04-16 03:14 GMT

மின்சார வாரியத்தால் பாதிக்கப்பட்ட உளுந்து பயிர்களை விவசாயிகள் காட்டினர்.

மயிலாடுதுறை துணை மின் நிலையத்திலிருந்து செரூதியூர் கிராமம் வரை மின்சார வாரியத்தினர் ரூ. 25லட்சம் மதிப்பீட்டில் உயர் மின்னழுத்த மின்சாரத்திற்காக 6 கிலோமீட்டர் தூரம் வரை விளைநிலங்களில் 145 மின்கம்பங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது செருதியூர் நல்லத்துகுடி கிராமத்தில் பயிர், உளுந்து அறுவடை பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 4 நாட்கள் தொடர் மழையின் காரணமாக அறுவடை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் நல்லத்துக்குடி கிராமத்தில் மின்வாரியத்தினர் விளை நிலங்களில் மின்கம்பங்களை அமைக்கும் பணிக்காக டிராக்டர் மூலம் வயல்களில் மின்கம்பங்களை இழுத்துச்சென்று வயல்களை தோண்டி மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் அறுவடை செய்யாமல் இருந்த பயறு, உளுந்து நாசமாகியுள்ளது. மேலும் மின்கம்பங்கள் அமைப்பது குறித்து முன்கூட்டியே விவசாயிகளும் தெரிவிக்காமல் பணிகள் நடைபெறுவதாகவும், சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு 5 அடி அகலம் வரை பயிறு உளுந்து சுமார் 5 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஏற்கனவே இயற்கைச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மின்சார வாரியத்தால் ஏற்பட்டுள்ள இழப்பால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், விவசாயிகளிடம் கருத்து கேட்டு மின்கம்பங்களை பதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News