போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2022-04-17 00:17 GMT

மயிலாடுதுறையில் தமிழர் தேசிய முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மத்திய அரசு அலுவலகங்களில் போலிச் சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த வடமாநிலத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் தமிழர் தேசிய முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த  ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்ட தலைவர் பேராசிரியர் முரளிதரன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர், அஞ்சல் மற்றும் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்கம், தமிழ்த் தேசிய பேரியக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு, அஞ்சல் துறை, தொடர்வண்டித் துறை, எல்லைப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ்நாட்டில் படித்தது போல் போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்து, அவர்களை உடனடியாக கைது செய்யவும், அப்பணிகளில் தமிழ்நாடு இளைஞர்களை பணியமர்த்தக் கோரியும், ஈரோடு மாவட்டத்தில் காவல்துறையினரைத் தாக்கிய வடமாநிலத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

Similar News