பூம்புகார் சுற்றுலாதலத்தில் தொல்லியத்துறை வரலாற்று பொக்கிஷங்கள் கண்காட்சி
.அனைத்து வசதிகளுடன் அமைந்துள்ள ஆழ்கடல் அகழாய்வு வைப்பகத்தில் காணக்கிடைக்காத வரலாற்று சான்றுகள் காட்சிப்படுத்தபட்டுள்ளன
சீர்காழி அருகே வரலாற்று சிறப்பு மிக்க பூம்புகார் சுற்றுலாதலத்தில் தொல்லியத்துறையால் பாதுகாப்படும் வரலாற்று பொக்கிஷங்கள் கண்காட்சியில் முதலாம் நூற்றாண்டு தொடங்கி 18 -ஆம் நூற்றாண்டு வரை பயன்படுத்திய பொருட்கள் மற்றும் 2.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய கிளிஞ்சல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வரலாற்று சிறப்புமிக்க பூம்புகார் சுற்றுலாதளம் அமைந்துள்ளது.இங்கு தமிழர்களின் வரலாற்றை நினைவுகூறும்.கண்ணகி,கோவலன் வாழ்க்கை வரலாறு சிற்ப்பங்கள், சிலப்பதிகார கலைக்கூடம், நிலா முற்றம், நீச்சல் குளம், ஆகியவற்றுடன் நீண்ட கடற்கரையுடன் 33 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள தமிழகத்தின் பெரிய சுற்றுலாதலமாகும்.
இங்கு தமிழக அரசின் தொல்லியல்துறை மூலம் ஆழ்கடல் தொல்லியல் அகழ்வைப்பகம் என்ற அருங்காட்சியகம் அமைந்துள்ளது. பூம்புகார் சுற்றுலா தலத்திற்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கலைக்கூடம் கண்ணகி சிலை மற்றும் கடற்கரையை மட்டுமே கண்டு ரசித்து செல்கின்றனர். ஆனால் நுழைவாயில் அருகே அமைந்துள்ள வரலாற்று பொக்கிஷமான தொல்லியல் அகழ்வைப்பகத்தை சாதாரணமாக கடந்து செல்கின்றனர்.அனைத்து வசதிகளுடன் சிறப்பாக அமைந்துள்ள ஆழ்கடல் அகழ்வைப்பகத்தில் காணக்கிடைக்காத பல்வேறு வரலாற்று சான்றுகள் காட்சிப்படுத்தபட்டுள்ளது.
குறிப்பாக 1 -ஆம் நூற்றாண்டு முதல் 18 -ஆம் நூற்றாண்டு வரை தமிழர்களின் பாரம்பரிய வீட்டு உபயோக பொருட்கள்,அணிகளன்கன்,சுடுமண் மற்றும் கருங்கலாள் செய்த பாத்திரங்கள்,சங்ககால செங்கற்கல்,சோழர்கால படகுகளின் பல்வேறு மாதிரிகள் காட்சிபடுத்தபட்டுள்ளது. புத்தர் வழிபாடு மற்றும் சிலைகள்,மேலும் சீன, ரோமானியர்கள் வருகைக்கு பின் பயன்படுத்திய குடுவைகள், காசுகளும் காட்சிப் படுத்தபட்டுள்ளன. சுமார் 2.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பிரமாண்ட கிளிஞ்சல் கல்லாக மாறிய படிமம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. திமிங்கலத்தின் முள் ஆழ்கடல் மீன்களின் தொகுப்பு என வரலாற்று பொக்கிஷங்களை நமது அடுத்த தலைமுறை அறிய வேண்டுமானால், பூம்புகார் ஆழ்கடல் அகழ்வைப்பகத்தை பார்த்தே அறியலாம். பூம்புகார் செல்லும் சுற்றுலா பயணிகள் கடற்கரையை மட்டும் கண்டு ரசிக்காமல்.,நமது வரலாற்றை பறைசாற்றும் தமிழக அரசின் ஆழ்கடல் அகழ்வைப்பகத்தையும் தவறாமல் காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.