மயிலாடுதுறையில் இசை பயிற்சி மாணவர்கள் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் இசை மற்றும் நடன பயிற்சி மாணவர்கள் சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

Update: 2022-01-16 04:49 GMT

மயிலாடுதுறையில் இசைப்பயிற்சி மாணவர்கள் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர்.

மயிலாடுதுறையில் தனியார் இசை மற்றும் நடனக்குழு பயிற்சி மாணவர்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மண் பானையில் பொங்கல் பொங்கி பொங்கலோ பொங்கல் என்று உற்சாகமாக குலவை சத்தமிட்டு மகிழ்ச்சியுடன் ஒவ்வொருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் மாணவர்கள் உற்சாகமாக நடனமாடி குதூகலமிட்டு பொங்கல் விழாவை கொண்டாடினர்.

Tags:    

Similar News