மயிலாடுதுறை வேலை வாய்ப்பு முகாமில் 611 பேருக்கு பணி நியமன ஆணை

மயிலாடுதுறையில் நடந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 611 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.;

Update: 2021-12-29 13:31 GMT

மயிலாடுதுறையில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக மன்னம்பந்தல் தனியார் பொறியியல் கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார்த்துறை நிறுவனங்கள் பங்கேற்றனர். 8ஆம் வகுப்பு முதல் பட்டம் மற்றும் பட்டயம் படித்த, 18 முதல் 35 வயதுடைய 1865 ஆண்கள் மற்றும் 2430 பெண்கள் இருபாலர்களும் மொத்தம் 4295 வேலை தேடுபவர்கள் பதிவு செய்து கொண்டு முகாமில் தங்களின் கல்வி தகுதிக்கேற்ப நிறுவனங்களி;ன் நேர்காணல்களில் பங்கேற்றனர்.

மொத்தம் 611 வேலைநாடுநர்களுக்கு பல்வேறு நிறுவனங்களின் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்கள் தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக அழைக்கப்பட்டு கல்வி தகுதி, பணி அனுபவம் போன்றவைகளை பொறுத்து நேர்கணல் வாயிலாகவும். பயிற்சிகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் . பன்னீர்செல்வம், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News