10 அம்ச கோரிக்கைகளுக்காக சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.;

Update: 2022-04-13 00:00 GMT

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம், நேற்று நடைபெற்றது. மயிலாடுதுறையில், ஊராட்சிய் ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சத்துணவு ஊழியர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் லதா தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் கலா கலந்து கொணடு உரையாற்றினார்.

இதில், வரையறுக்கப்பட்ட முறையான ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்குவதும் குடும்ப ஓய்வூதியத்தை வழங்க வேண்டும், ஓய்வு பெறுபவர்களுக்கு பணி கொடையை உயர்த்தி வழங்க வேண்டும் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள், அமைப்பாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

இறுதியில் கோரிக்கை அடங்கிய மனுவை ஒன்றிய ஆணையர் அன்பரசிடம் வழங்கினர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள குத்தாலம், செம்பனார்கோவில், சீர்காழி, கொள்ளிடம், உள்ளிட்ட ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News