தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்பு அகற்றம்

தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி மயிலாடுதுறையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

Update: 2021-12-08 15:43 GMT

தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுபடி மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

மயிலாடுதுறையில் காவிரி ஆறு, பழங்காவிரி வாய்க்கால் மற்றும் குளங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, புங்கனூர் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் சட்ட ஆலோசகர் விஜயகுமார் என்பவர் 2017-ஆம் ஆண்டு சென்னை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

விசாரணை முடிவில், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி 22.12.2021ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய  பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனைத்தொடாந்து மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் பாலு உத்தரவின் பேரில் இன்று மயிலாடுதுறை திருமஞ்சனவீதியில் உள்ள இரட்டைக்குளத்தின் கரை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கியது. தனி நபர் 3 பேரால் சுவர் மற்றும் வேலி வைத்து 5,360 சதுரஅடியில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் ஆக்ரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.

Tags:    

Similar News