மயிலாடுதுறையில் மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறையில் மின்சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2021-12-18 13:59 GMT

மயிலாடுதுறையில் மின் சிக்கன வார விழா பேரணியை கலெக்டர் தொடங்கிவைத்தார்.

மின்சார சிக்கனம் மற்றும் சேமிப்பு வாரவிழா டிசம்பர் 14-ஆம் தொடங்கி டிசம்பர் 20-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

அலுவலகத்தில் புறப்பட்ட பேரணியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமை வகித்து தொடங்கி வைத்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் லலிதா, கோட்டாட்சியர் பாலாஜி, டிஎஸ்பி வசந்தராஜ் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் மின்சார சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

பேரணியில் பொதுமக்கள் குழல் விளக்குகளுக்கு பதிலாக எல்இடி விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும், போதிய வெளிச்சத்துடன் வீடு கட்ட வேண்டும், கிரைண்டர்களில் நைலான் பெல்ட்டுகளை உபயோகப்படுத்த வேண்டும், தேவையில்லாமல் மின்சாரத்தை பயன்படுத்த கூடாது போன்ற விழிப்புணர்வு கருத்துக்கள் கொண்டதுண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வழகினர். மேலும் ஒலிப்பெருக்கி மூலமும், விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர். மின்வாரிய பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று துவங்கிய இடத்திலேயே முடிவடைந்தது.

Tags:    

Similar News