மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 29 வேட்பு மனு தாக்கல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 29 வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Update: 2021-03-19 07:09 GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை தேர்தலில் போட்டியிடுவதற்காக 29 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை சட்டசபை தொகுதியில் மக்கள் நீதிமய்யம் கட்சி வேட்பாளர் ரவிச்சந்திரன், சுயேட்சை ராஜ்குமார் ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலாஜியிடம் வேட்புமனுதாக்கல் செய்தனர். சீர்காழி சட்டசபை தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக்கழக வேட்பாளர் பொன்பாலு, நாம்vதமிழர் கட்சி மாற்று வேட்பாளர் சுலோச்சனா ஆகிய 2பேரும், பூம்புகார் சட்டசபை தொகுதியில் அமமுக வேட்பாளர் செந்தமிழன்,மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் மெகராஜ்தீன் ஆகிய 2 பேரும் வேட்புமனுதாக்கல் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய தொகுதிகளில் இன்று மட்டும் 6 பேர் வேட்புமனுதாக்கல் செய்தனர். இதுவரை மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் மொத்தம் 29 பேர் வேட்புமனுதாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News