தரங்கம்பாடி பேரூராட்சி தேர்தல் பணிகளை தேர்தல் பார்வையாளர் ஆய்வு
தரங்கம்பாடி பேரூராட்சி தேர்தல் பணிகளை தேர்தல் பார்வையாளர் விஜயேந்திர பாண்டியன் ஆய்வு செய்தார்.;
மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி மற்றும் மயிலாடுதுறை ஆகிய நகராட்சிகளுக்கும், குத்தாலம்,மணல்மேடு, வைத்தீஸ்வரன்கோயில் மற்றும் தரங்கம்பாடி ஆகிய 4 பேரூராட்சிகளுக்கும் நகர்ப்புற தேர்தல் நடைபெறுவதை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தேர்தல் கண்காணிப்பாளராக விஜயேந்திர பாண்டியன் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று தேர்தல் பார்வையாளர் தரங்கம்பாடி பேரூராட்சி நகர்ப்புற தேர்தல் பணிகளை ஆய்வு செய்யும் போது பறக்கும் படையினர் வாகன தணிக்கை செய்யும் பணியினை ஆய்வு செய்தார். உடன் தேர்தல் மேற்பார்வையாளரின் தொடர்பு அலுவலர் சுந்தரம் வட்டாட்சியர் மற்றும் பறக்கும் படை அலுவலர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் பாபு உடனிருந்தார்.