100% வாக்களிப்பு விழிப்புணர்வு மராத்தான்

100 சதவீதம் வாக்களிப்பு விழிப்புணர்வு மராத்தான் போட்டி. 150க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு;

Update: 2021-03-18 08:36 GMT

வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வாக்காளர்களுக்கு உணர்த்தும் விதமாக மயிலாடுதுறையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் தொடங்கிய மராத்தான் போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் மயிலாடுதுறையை சேர்ந்த 7 கல்லூரிகளில் பயிலும் சுமார் 150 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

மராத்தான் போட்டியில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மாணவர்கள் கலந்து கொண்டனர். தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் தொடங்கிய மராத்தான் போட்டி முக்கிய வீதி வழியாக சென்று குருஞான சம்பந்தர் மேல்நிலை பள்ளியில் முடிவடைந்தது.

நிகழ்ச்சியின் இறுதியில் பங்கேற்ற அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News