சீர்காழி மின்வாரிய ஊழியர் மகனுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை

சீர்காழி அருகே பணியின்போது இறந்த மின்வாரிய ஊழியர் மகனுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.;

Update: 2021-09-30 10:27 GMT

மின்வாரிய ஊழியர் மகனுக்கு பணி நியமன ஆணையை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வள்ளுவகுடி கிராமத்தில் கடந்த ஆண்டு மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் கருணாகரன் என்பவர் உயிரிழந்தார்.

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கருணாகரனின்  மகன் நவீன்ராஜுக்கு  கருணை அடிப்படையில்  பணி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி  கருணாகரனின் மகன் நவீன்ராஜுக்கு  கள உதவியாளர் பதவிக்கான பணி நியமன ஆணையை சீர்காழி சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில்  எம்.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. இன்று வழங்கினார்.

இந்நிகழ்வில் மின்சார வாரிய துறை செயற்பொறியாளர் சதீஷ்குமார், உதவி செயற்பொறியாளர் விசுவநாதன், உதவி பொறியாளர்கள் ரங்கராஜன், சுமத்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News