அரசு மருத்துவமனையில் ஓஎன்ஜிசி மூலம் குடிநீர் சுத்திகரிப்பு கருவி அமைப்பு
ஓஎன்ஜிசி சமூக திட்டத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் மருத்துவமனை, அரசு பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ளது
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஓஎன்ஜிசி சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஓஎன்ஜிசி சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலம் ரூபாய் ஐந்தரை லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மற்றும் வானாதிராஜபுரம், ஆனந்ததாண்டவபுரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் கலந்துகொண்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இதில் ஓஎன்ஜிசி காவேரி மேலாளர் அனுராக் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜசேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.