செம்பனார்கோயில் ஒன்றிய வேட்பாளருக்கு எம்.எல்.ஏ. வாக்கு சேகரிப்பு

செம்பனார்கோயில் ஒன்றிய வேட்பாளருக்கு ஆதரவாக தி.மு.க. எம்.எல்.ஏ. வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

Update: 2021-10-03 14:36 GMT

மயிலாடுதுறை உள்ளாட்சி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக நிவேதா எம். முருகன் எம்.எல்.ஏ. வாக்கு சேகரித்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பனார்கோயில் ஒன்றியம் காட்டுச்சேரி, சந்திராபாடி, திருக்களாச்சேரி உள்ளிட்ட ஊராட்சிகளின் வார்டு எண் 30 ஒன்றியக்குழு  தி.மு.க.வேட்பாளராக செ.செல்வம் போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் காட்டுச்சேரி ஊராட்சியில் வாக்குகள் சேகரித்தார்.

நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், தரங்கை பேரூர் தி.மு.க. செயலாளர் வெற்றிவேல், ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாஸ்கர், பாண்டிச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி சாமிநாதன் மற்றும் காட்டுச்சேரி ஊராட்சி தி.மு..க கிளைச் செயலாளர்கள் தி.மு.க  உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News