பொறையார் பேருந்து நிலையத்தில் தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
பொறையார் பேருந்து நிலையத்தில் தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.;
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி அதிகமான வெப்பத்தால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டுமென தி.மு.க. நிர்வாகிகளுக்கு கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நீர், மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் அறிவுறுத்தலின்படி மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பொறையார் காமராஜர் பேருந்து நிலையத்தில் நீர் மோர் பந்தலை 9-வது வார்டு உறுப்பினர் ஜோன் செல்லப்பா ஏற்பாட்டில் பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி குமரவேல், செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.அப்துல்மாலிக் ஆகியோர் திறந்து வைத்தனர்.
பின்னர் பொதுமக்களுக்கு நீர், மோர், தர்பூசணி, இளநீர் போன்றவற்றை வழங்கினர். மேலும் குளிர்ச்சியூட்டும் இயற்கை பழச்சாறுகள் மற்றும் நீர் பொதுமக்கள் தாகத்தை தணித்துக் கொள்ள ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.