மயிலாடுதுறை அருகே பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் வினியோகம்
மயிலாடுதுறை அருகே பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் வினியோகம்;
பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை அடுத்த திருக்களாச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தமிழ்நாடு முதல்வர் அறிவித்து இருந்த பொது நகை கடன் தள்ளுபடி நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் நந்தினி ஸ்ரீதர் 724 நபர்களுக்கு நகை மற்றும் தள்ளுபடி ஆணை வழங்கி துவக்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பொது நகைக்கடன் தள்ளுபடி தமிழகமெங்கும் தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கம் வழங்கி வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் அறிவுறுத்தலின் பேரில் திருக்களாச்சேரி தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை தொடக்க வோண்மை கூட்டுறவு வங்கியில் செம்பனார்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நகை மற்றும் தள்ளுபடி பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.