மயிலாடுதுறை முத்தூர் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

மயிலாடுதுறை அருகே முத்தூர் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் திறந்து வைத்தார்.

Update: 2022-01-28 07:55 GMT

மயிலாடுதுறை அருகே முத்தூர் ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட நேரடிநெல்  கொள்முதல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் 1.68 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. பெரும்பாலான கிராமங்களில் விவசாயிகள் அறுவடைப் பணிகளை தொடங்கியுள்ள நிலையில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் முத்தூர் ஊராட்சி, கிளியனூர் கிராமத்தில் சுமார் 5 கிலோமீட்டர் சுற்றுவட்டார பகுதிகளின் நெல் பயிரிடும் 10 கிராம விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய புதிய கட்டிடத்தை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் திறந்து, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதலை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், ஒன்றியக்குழுத் தலைவர் மகேந்திரன், குத்தாலம் தெற்கு ஒன்றிய செயலாளர் மங்கைசங்கர், செம்பை ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி முருகன், கிளை செயலாளர் மாதவன், நெல் கொள்முதல் அதிகாரி சங்கர், பட்டியல் எழுத்தர் ராஜசேகர் மற்றும் முத்து ஊராட்சி கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News