தர்மராஜா மாரியம்மன் கோவில் திருவிழா: நேர்த்திக்கடன் நிறைவேற்றிய பக்தர்கள்

சீர்காழி அருகே 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த தர்மராஜா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் வழிபட்டனர்

Update: 2022-02-04 11:30 GMT

சீக்ராழி  செம்மங்குடி தர்மராஜா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

சீர்காழி அருகே 100  ஆண்டுகள் பழமைவாய்ந்த தர்மராஜா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்மங்குடி கிராமத்தில் பழமைவாய்ந்த தர்மராஜா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம், அதன்படி இந்த ஆண்டு இன்று தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த 26 ம் தேதி கொடி ஏற்றப்பட்டு காப்பு கட்டி தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று தீமிதி உற்சவ திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் இருந்து 100 க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வந்து தர்மராஜா மாரியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதனை தொடர்ந்து மாலை புரவாய்க்காலில் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் மற்றும் அலகு காவடிகள் மேல தாலங்கள் முழங்க வருகை புரிந்து கோவிலின் முன்பு அமைக்கப்பட்ட தீ குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சீர்காழி காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் காவல்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News