மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் தருமபுரீஸ்வரர் கோயிலில் சதசண்டி யாகம்

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் தருமபுரீஸ்வரர் கோயிலில் நவராத்திரியையொட்டி சதசண்டியாகம் நடந்தது.

Update: 2021-10-07 13:01 GMT

தருமபுரம் தருமபுரீஸ்வரர் கோயிலில்  27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பூஜை நடத்தினார்.

மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த தருமபுரீஸ்வரர் ஆலயத்தில், பதினெட்டு கைகளுடன் கூடிய அஷ்டதசபுஜ துர்க்கா மகாலெஷ்மி சன்னதி அமைந்துள்ளது.

இங்கு நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சதசண்டி யாகம் நேற்று கணபதி பூஜையுடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் யாகத்தின் முதல் நாளான இன்று சதசண்டி யாகம் நடைபெற்றது. தொடர்ந்து யாகத்தில், சுமங்கலி பூஜை கன்னிகா பூஜை நடைபெற்று, மஹாதீபாரானை நடைபெற்றது. தேவி மகாத்மியம், ரிக் யஜூர் சாம அதர்வண வேதங்கள் வாசிக்கப்பட்டன.

தொடர்ந்து அம்பாளுக்கு தீபாராதனை நடைபெற்றது. தருமபுரம் 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News