தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தேரடி வர சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தேரடி வர சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.;

Update: 2022-05-06 10:57 GMT
தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தேரடி வர சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

தேரடி வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.

  • whatsapp icon

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், சமயக் குரவர்களால் பாடல் பெற்றதுமான உக்தவேதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் எட்டாம் தேதி நடைபெறுகிறது. இதற்கான முதல் கால யாகசாலை பூஜை கடந்த 4ஆம் தேதி மாலை துவங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று ஆலயத்திற்கு எதிரே தேரடி விநாயகர் எனப்படும் வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது தருமபுர ஆதீன 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

Tags:    

Similar News