தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழக அரசின் மாநில பாடலாக அறிவித்ததற்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழக அரசின் மாநில பாடலாக அறிவித்ததற்கு தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்

Update: 2021-12-19 07:52 GMT

தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழக அரசின் மாநில பாடலாக அறிவித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. இந்த அறிவிப்புக்கு இந்தியாவின் தொன்மை வாய்ந்த ஆதீனங்களில் ஒன்றான தருமபுரம் ஆதீனம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது:

தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்த முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கட்கு நமது நல்லாசிகள். தமிழைப் போற்றும் முகமாக தமிழுக்கு உயர்வளிக்கும் நல்உள்ளத்தோடு சிறந்த அறிவிப்பை அறிவித்திருப்பது பாராட்டுதலுக்குரியது. தமிழுக்கு தொண்டு செய்வோர் என்றும் உயர்வு பெறுவர். தமிழுக்கு ஒல்லும் வகையான் உயர்வளிக்கும் பணி மேலும் தொடர நமது நல்லாசிகள் என அவர்தம் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News