தருமபரம் ஆதினம் பட்டினப்பிரவேசம் விவகாரத்தில் அரசு முழுகவனம்: மாவட்ட ஆட்சியர்
தருமபரம் ஆதினம் பட்டினப்பிரவேசம் விவகாரம் அரசின் முழு கவனத்தில் இருப்பதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா பேட்டி
தருமபரம் ஆதினம் பட்டினப்பிரவேசம் விவகாரம் , அரசின் முழு கவனத்தில் இருப்பதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா பேட்டியளித்தார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் ஓராண்டு சாதனை மலரை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா வெளியிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியதாவது:
மூவலூர் ராமாமிர்தம் மற்றும் வேதநாயகம் பிள்ளை ஆகியோரின் நினைவாக சிலை மற்றும் நினைவு மண்டபம் மயிலாடுதுறையில் அமைக்க தமிழக அரசால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.6 குளங்கள் தூர்வாரப்பட்டு அதனை மேம்படுத்துவதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் அனைத்து குளம் மற்றும் பூங்காக்கள் சீரமைக்க நிதி ஒதுக்கப்படும். மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனைக்கு தீர்வாக அரசு அதன் பணிகளை இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. தற்போது பலவீனமாக உள்ள பகுதிகளை சரி செய்து சாலை அமைக்க கூடிய பணிகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன், மற்றொரு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் .ரிங் ரோடு அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் 50 சதவீதம் முடிவடைந்து உள்ளதாகவும் , இதற்கென சிறப்பு வருவாய் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.தருமை ஆதீனம் பட்டின பிரவேசம் தடை விதித்த விவகாரம் அரசின் முழு கவனத்தில் இருப்பதாகவும் விரைவில் அது தொடர்பான அறிவிப்புகள் வெளி வந்தவுடன் தெரிவிக்கப்படும் என்றார் ஆட்சியர் லலிதா