சீர்காழி அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
சீர்காழி அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்
சீர்காழியில் அங்காள பரமேஸ்வரி ஆலய அலகுகாவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகில் அங்காளபரமேஸ்வரி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு மயான சூறை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் சீர்காழி சட்டைநாதர் கோவிலிலிருந்து அலகு காவடி எடுத்து மேளதாளங்கள் முழங்க கரகத்துடன் பழைய பஸ் நிலையம் கடைவீதி கச்சேரி சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.
பின்னர் அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து வருகிற 1-ஆம் தேதி இரவு மகா சிவராத்திரியை முன்னிட்டு மயான சூரை நிகழ்ச்சி நடைபெற உள்ளது