மயிலாடுதுறையில் துண்டு பிரசுரம் வழங்கி டெங்கு கொசு ஒழிப்பு பிரச்சாரம்

மயிலாடுதுறையில் நகராட்சி மூலம் துண்டு பிரசுரம் வழங்கி டெங்கு கொசு ஒழிப்பு பிரச்சாரப்பணி மேற்கொள்ளப்பட்டது.

Update: 2021-11-29 14:50 GMT

மயிலாடுதுறை நகராட்சி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பாக துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை நகராட்சி திருவிழந்தூர் அண்ணாநகர் பகுதியில் நகராட்சி ஆணையர் பாலு உத்தரவின் பேரில் நகர்நல அலுவலர் டாக்டர் மலர்மன்னன் தலைமையில் டெங்கு நோய் தடுப்பு பணிகளை நகராட்சி சுகாதார பணியாளர்கள் மேற்கொண்டனர்.

டெங்கு நோய்வராமல் தடுப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துப்புரவு ஆய்வாளர்கள் பிச்சைமுத்து, ராமையன், உதவி கணப்பணியாளர் கணேசன் மற்றும் டெங்கு நோய் தடுப்பு குழுவினர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கியதோடு வீடுகளில் பயன்படாத பொருட்களில் தண்ணீர் தேங்கிநிற்காமல் பாதுகாத்து கொள்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News